Saturday, December 9, 2023
spot_img
Homeஉலகம்அடுத்த 10 ஆண்டுகளில் இவரைப் பார்த்து குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவார்கள்! இளம் வீரரை பாராட்டித் தள்ளிய...

அடுத்த 10 ஆண்டுகளில் இவரைப் பார்த்து குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவார்கள்! இளம் வீரரை பாராட்டித் தள்ளிய முன்னாள் கேப்டன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹாரி புரூக்கை முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

ஜோ ரூட் – ஹாரி புரூக் அதிரடி

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. அந்த அணி 21 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் அனுபவ வீரர் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 315 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹாரி புரூக் 184 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் 101 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

4வது டெஸ்ட் சதம்

ஹாரி புரூக்கிற்கு இது 4வது சதம் ஆகும். 24 வயதாகும் அவர் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 807 ஓட்டங்கள் குவித்து, 100 சராசரி என மிரள வைத்துள்ளார்.

அவரது ஸ்கோரில் 4 சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். இன்றைய டெஸ்ட் போட்டியில் அதிரடியில் மிரட்டிய புரூக், 169 பந்துகளில் 5 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 184 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

மைக்கேல் வாகன் பாராட்டு

புரூக்கின் மிரட்டல் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல துடுப்பாட்டம் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர். தற்போது அடுத்த 10 ஆண்டுகளில் அதே குழந்தைகள் ஹாரி புரூக்கை போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்’ என கூறியுள்ளார்.    

RELATED ARTICLES

Most Popular