Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைவெளிநாடு சென்ற மனைவியை வரவழைக்க கணவன் செய்த செயல்! குழப்பத்தில் அதிகாரிகள்

வெளிநாடு சென்ற மனைவியை வரவழைக்க கணவன் செய்த செயல்! குழப்பத்தில் அதிகாரிகள்

வெளிநாடு சென்ற மனைவியை நாட்டிற்கு வரவழைக்க கணவன் தனது மூன்று பிள்ளைகளையும் தங்காலை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அலுவலகத்திற்கு முன்பாக விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதன்போது ஒரு வயது, ஆறு மற்றும் பத்து வயதுடைய மூன்று பிள்ளைகளையே இவ்வாறு விட்டுச்சென்றுள்ளதாக தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு சென்ற மனைவியை வரவழைக்க கணவன் செய்த செயல்! குழப்பத்தில் அதிகாரிகள் | Srilanka Bureau Foreign Employment House Maid Work

சந்தேகநபர் கைது

கடந்த வருடம் ஜூலை மாதம் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற தனது மனைவியை நாட்டிற்கு மீண்டும் வரவழைக்க  நடவடிக்கை எடுக்குமாறு தங்காலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இருப்பினும் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கோபத்தில் குழந்தைகளை விட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular