ராஷ்மிகா மந்தனா
தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
இதற்க்கு முன் தெலுங்கில் நடித்து வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் வெற்றி தான் ராஷ்மிகாவை தென்னிந்திய அளவில் பிரபலடுத்தியது.
இதை தொடர்ந்து நாணி, மகேஷ் பாபு என முன்னணி தெலுங்கு நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர், விஜய்யுடன் வாரிசு படத்தில் கைகோர்த்தார்.
இப்படத்தில் தனக்கு பெரிதளவில் முக்கியத்துவம் இல்லை என்று இருந்தபோதிலும் விஜய்க்காக தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
ராஷ்மிகா சம்பளம்
அதே போல் படத்தில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் பாடல்கள் மூலமாகவே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இந்நிலையில், வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.