தமிழ் சினிமாவின் பாப்புலர் இயக்குனராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் உலக நாயகன் கமல் ஹாசன் வைத்து இயக்கிய விக்ரம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருவது நாம் அறிந்ததே. இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது.
சம்பளம்
பல நடிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக பல தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். இதற்காக லோகேஷ் கனகராஜிக்கு ரூ. 50 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுக்க முன்வந்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
