Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்கனடா மருத்துவமனையின் அலட்சியத்தால் பறிப்போன உயிர்; கணவரின் அதிரடி முடிவு!

கனடா மருத்துவமனையின் அலட்சியத்தால் பறிப்போன உயிர்; கணவரின் அதிரடி முடிவு!

கனடாவின் நோவா ஸ்கோடியாவில் மருத்துவமனை ஒன்றின் அவசரப் பிரிவுக்குள் அனுமதி கேட்டு 7 மணி நேரம் காத்திருக்க நேர்ந்த பெண் ஒருவர் இறந்த நிலையில், அந்த குடும்பம் தற்போது சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

நோவா ஸ்கோடியா மாகாணத்தில் கம்பர்லேண்ட் பிராந்திய சுகாதார மைய அவசர அறையிலேயே புத்தாண்டுக்கு முந்தைய நாள் 37 வயதான, மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான Allison Holthoff மரணமடைந்தார்.

அவரது கணவர் மேலும் தெரிவிக்கையில்,

தமது மனைவி தாங்க முடியாத வலியுடன் சிகிச்சைக்காக Amherst மருத்துவமனையில் பல மணி நேரம் காத்திருந்துள்ளார் என்றார். நான் இறக்கப்போகிறேன் என நினைக்கிறேன், என்னை இங்கேயே இறக்க விடாதீர்கள் என கடைசியாக அவர் கூறியுள்ள வார்த்தைகள் தம்மை நொறுக்குவதாக உள்ளது என அவர் கூறியுள்ளார் .

Allison Holthoff மரணத்திற்கு என்ன காரணம் என்பது தொடர்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை என்றாலும், Amherst மருத்துவமனையின் அவசர பிரிவு செயல்பாடு குறித்து விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என சுகாதார ஆணையம் உறுதி அளித்துள்ளது.

இந்த நிலையில் தான், நோவா ஸ்கோடியா சுகாதார ஆணையத்திற்கு எதிராக Allison Holthoff குடும்பம் சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதில் அவசர சிகிச்சை அறைகளின் செயல்பாட்டை கண்காணிக்க தவறியது, காத்திருக்கும் நோயாளிகளை கவனிக்காமல் விட்டுவிட்டது, உரிய வேளையில் தேவையான சோதனைகளை முன்னெடுக்காமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களை பட்டியலிட்டுள்ளனர்.

மேலும், அவசர சிகிச்சை பிரிவின் மேற்பார்வையாளரான மருத்துவரை குறித்த வழக்கில் எதிர்தரப்பாக இணைத்துள்ளனர். இதன்படி உரிய கவனிப்புக்காக சுமார் 7 மணி நேரம் காத்திருக்க நேர்ந்ததாக அந்த குடும்பம் குற்றஞ்சாட்டியுள்ளது.

உரிய நேரத்தில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என கூறியுள்ள Allison Holthoff குடும்பம், நோவா ஸ்கோடியா மக்களுக்கு முறையான சிகிச்சை உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடர்வாதாக தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular