Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்கனடாவில் மக்கள் எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினை

கனடாவில் மக்கள் எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினை

 கனடாவில், நாடு முழுவதிலும் பணவீக்கம் குறைவடைந்துள்ள நிலையில் மக்கள் உணவுப் பொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியளவில் உணவுப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என பொருளியல் நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்னர்.

கனடாவில் மக்கள் எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினை | Food Prices Continue To Climb

கடந்த ஜனவரி மாதம் உணவுப் பொருட்களின் விலைகள் வருடாந்த அடிப்படையில் 10.4 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ரெஸ்டுரன்ட்கள் கொள்வனவு செய்யப்படும் உணவு வகைகளின் விலைகள் 8.2 வீதமாக உயர்வடைந்துள்ளது.

இறைச்சி, பேக்கரி உற்பத்திகள், பால் உற்பத்திகள், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளன. 

RELATED ARTICLES

Most Popular