ஐசிசி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அவர் 695 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

மேலும், டி20 சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க 4 வது இடத்தில் நீடிக்கிறார்.
வனிந்து 175 புள்ளிகளுடன் அந்த நிலையில் நீடிக்கிறார்.
மேலும், வனிந்து ஹசரங்க ஒருநாள் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் 240 புள்ளிகளுடன் 7வது இடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.