Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

16பேர் கொண்ட அணியில், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்கா டெஸ்டின் போது உபாதைக்குள்ளான ஜோஸ் ஹசில்வுட்டுக்கு பதிலாக ஜே ரிச்சட்சன் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

எனினும், டெஸ்ட் தொடரின் போது உபாதைக்குள்ளாகி தொடரிலிருந்து விலகிய டேவிட் வோர்னர், ஒருநாள் தொடரில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல, டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்ட அஸ்டன் அகர் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

பெட் கம்மின்ஸ் தலைமையிலான ஒருநாள் அணியில், டேவிட் வோர்னர், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா, கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், சீன் அபோட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி மும்பையிலும், இரண்டாவது போட்டி மார்ச் 19ஆம் திகதி விசாகப்பட்டினத்திலும், மார்ச் 22ஆம் திகதி சென்னையிலும் நடைபெறவுள்ளன.

RELATED ARTICLES

Most Popular