வெங்கி அட்லூரி இயக்கத்தில் முதன் முறையாக தனுஷ் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வாத்தி.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளிவந்தது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்திருந்தனர்.

வசூல் விவரம்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் கடந்த மூன்று நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் 4 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.