Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைதற்போதைய ஆட்சியில் மேலும் வரி அதிகரிக்கப்படும் – எச்சரிக்கும் எதிர்க்கட்சி.

தற்போதைய ஆட்சியில் மேலும் வரி அதிகரிக்கப்படும் – எச்சரிக்கும் எதிர்க்கட்சி.

தற்போதைய ஆட்சியில் மேலும் வரி அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரச வருவாயை அதிகரிக்க உலக வங்கி 2015 ல் அறிவுறுத்திமைக்கு இணங்க அதற்கான நடவடிக்கையை எடுக்கும் போது பெரிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தமையை கண்டறிந்ததாக சுட்டிக்காட்டினார்.

பின்னர் இந்த பெரிய நிறுவனங்களுக்கான வரியை தனது அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டத்தில் நீக்கிய கோட்டாபய ராஜபக்ஷவும் இந்த நிலைமைக்கு பொறுப்பு என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கோட்டபாய ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்ததன் காரணமாக 800 பில்லியன் இழப்பு ஏற்பட்டது என்றும் இரு மாதங்களுக்குப் பின்னர் கொரோனா மருந்துக்கு பணம் இல்லாமல் தவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் மேலும் வரி மற்றும் கட்டண அதிகரிப்புகளை பொது மக்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular