Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்உக்ரைனையும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளையும் ரஷ்யா விஞ்சிவிட முடியும் என்று நினைப்பது தவறானது: பைடன்.

உக்ரைனையும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளையும் ரஷ்யா விஞ்சிவிட முடியும் என்று நினைப்பது தவறானது: பைடன்.

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனையும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளையும் ரஷ்யா விஞ்சிவிட முடியும் என்று நினைப்பது தவறானது என உக்ரைனுக்கு முன்னறிவிப்பின்றி விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக பைடனின் முதல் உக்ரைன் பயணமாக இது அமைந்திருந்தது.

இந்த திடிர் விஜயத்தின் போது, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்த பைடன், ரஷ்யா கிரிமியாவை இணைத்து, அதன் பினாமி படைகள் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தின் சில பகுதிகளை கைப்பற்றிய ஒன்பது ஆண்டுகளில் இறந்த வீரர்களின் நினைவிடத்திற்குச் சென்றார்.

இதன் போது, ‘நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,’ என்று உக்ரைனுக்கு அவர் ஊக்கமளித்தார்.

பைடனின் பிரசன்னம், ‘உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் அமெரிக்காவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டது’ என்று வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.

முந்தைய ஜனாதிபதியின் போர்க்கால ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான பயணங்கள் அதிக அமெரிக்க இராணுவ பிரசன்னத்தின் ஆதரவைக் கொண்டிருந்தநிலையில், தற்போது உக்ரைன் பயணம் பேசு பொருளாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular