Saturday, December 9, 2023
spot_img
Homeஉலகம்ரோட்டர்டாம் பகிரங்க டென்னிஸ்: டேனியல் மெட்வடேவ் சம்பியன்!

ரோட்டர்டாம் பகிரங்க டென்னிஸ்: டேனியல் மெட்வடேவ் சம்பியன்!

ரோட்டர்டாம் பகிரங்க டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

2021ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற 27 வயதான டேனியல் மெட்வடேவ்வுக்கு இது 16ஆவது பட்டமாகும்.

அத்துடன், கடந்த ஒக்டோபரில் வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில் வென்ற பிறகு முதல் ஏடிபி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவ், இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 5-7 6-2 6-2 என்ற கணக்கில் சின்னரை தோற்கடித்து டேனியல் மெட்வடேவ், சம்பியன் பட்டம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம், தற்போது உலக அளவில் 11வது இடத்தில் இருக்கும் மெட்வடேவ், ஏடிபி தரவரிசையில் முதல் 10 இடத்துக்கு முன்னேறுவார்.

RELATED ARTICLES

Most Popular