Sunday, December 3, 2023
spot_img
Homeகனடாபோர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லை; கனடாவில் தஞ்சமடையும் உக்ரைன் மக்கள்!

போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லை; கனடாவில் தஞ்சமடையும் உக்ரைன் மக்கள்!

  ரஷ்யா உக்ரைன் போர் நீடித்துவரும் நிலையில், நாளுக்கு 100 பேர் கனடாவின் கல்கரி விமான நிலையத்தில் வந்திறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை கடந்த 2022 மார்ச் மாதம் தொடங்கி, உக்ரேனிய மக்களுக்கு கல்கரியில் தங்கும் வசதிகள் அளித்துவரும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

உக்ரேனியரான Hanna Vakhovska போர் தொடங்கிய பின்னர், உயிருக்கு பயந்து சுமார் 10 நாட்கள் பதுங்கு குழிகளில் தங்கியதாகவும், உயிருடன் அங்கிருந்து வெளியேற முடியுமா என கலங்கிப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லை

இந்த நிலையில் தற்போது தாம் பாதுகாப்பாக உணர்வதாக கல்கரியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே வசித்துவரும் Hanna Vakhovska தெரிவித்துள்ளார். மரியுபோல் பகுதியில் இருந்து வெளியேறி ஆபத்தான பயணம் மேற்கொண்ட அவரும் குடும்பமும், மூன்று ஐரோப்பிய நாடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

தற்போது கல்கரியில் விமான நிலையத்தில் பணியாற்றிவரும் அவர், உக்ரேனிய மக்களுக்காக தம்மால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்.

இது தொடர்பில் கல்கரி கிறிஸ்தவ அமைப்பானது வெளியிட்ட தகவலில்,

உக்ரேனில் இருந்து நாளுக்கும் 100 பேர்கள் கல்கரியில் நிலையத்தில் விமான இறங்குவதாகவும், உக்ரேனில் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular