கனடாவில் புதிய வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோரோ வைரஸ் என்ற வைரஸ் தொற்றின் பரவுகை அதிகரித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப் பகுதியில் நிலவிய அதேயளவு வீரியத்துன் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் தொற்றினால வாந்திபேதி நோய் ஏற்படக்கூடிய அபாய நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக இந்த வைரஸ் தொற்று நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்
ளது. இந்த வைரஸ் தொற்று பரவக்கூடியது எனவும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.