Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்கனடாவில் ஆசிரியை வீடொன்றில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கனடாவில் ஆசிரியை வீடொன்றில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கனடாவில் ஆசிரியை வீடோன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆசிரியை ஒருவர் தனது மகனுடன் வாழ்ந்து வந்த வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்குள் பிரவேசித்த இரண்டு சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

வீட்டின் குடியிருப்பாளர் ஒருவரையும் சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் வீட்டிற்குள் அத்து மீறி பிரவேசித்தனரா அல்லது வேறும் ஏதேனும் பிணக்குகளா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

RELATED ARTICLES

Most Popular