Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்ஏடிபி பியூனஸ் அயர்ஸ் டென்னிஸ்: அல்கராஸ் கார்பியா சம்பியன்!!

ஏடிபி பியூனஸ் அயர்ஸ் டென்னிஸ்: அல்கராஸ் கார்பியா சம்பியன்!!

ஆண்களுக்கான ஏடிபி பியூனஸ் அயர்ஸ் டென்னிஸ் தொடரில், இளம் வீரரான ஸ்பெயினின் அல்கராஸ் கார்பியா, சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் அல்கராஸ் கார்பியா, பிரித்தானியாவின் கேமரூன் நோரியை எதிர்கொண்டார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ஸ்பெயினின் அல்கராஸ் கார்பியா, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.

19 வயதான அல்கராஸ், நான்கு மாத காயத்திலிருந்து மீண்டதற்கு பின்னர், நடப்பு ஆண்டின் முதல் தொடரில் பங்கேற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

2022இல் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயினின் உலகின் இரண்டாம் நிலை வீரருக்கு இது ஏழாவது பட்டமாகும்.

2015இல் ரஃபேல் நடாலுக்குப் பிறகு பியூனஸ் அயர்ஸில் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் ஆவார்.

RELATED ARTICLES

Most Popular