Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்"பெண்களின் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றது ரஷ்யா" – கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு !

“பெண்களின் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றது ரஷ்யா” – கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு !

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததன் மூலம் ரஷ்யா மனித உரிமைகளை மீறுவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜேர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர், மேலும் மாநாட்டில் உக்ரைன் நெருக்கடி குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய நிலையில் இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

மேலும் உக்ரைன் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தபடுவதாக குற்றச்சாட்டுக்கள் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular