Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்இங்கிலாந்து அணி 267 ஓட்டங்களினால் வெற்றி !

இங்கிலாந்து அணி 267 ஓட்டங்களினால் வெற்றி !

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது.

அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சிற்காக 9 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொள்ள நியூசிலாந்து அணி 306 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிஸிங்ஸிற்காக இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களை பெற, நியூசிலாந்து அணி 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதி போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி வெலிங்டனில் இடம்பெறவுள்ளது.

RELATED ARTICLES

Most Popular