Sunday, December 3, 2023
spot_img
Homeகனடாஅவசரகால அதிகாரங்களை பயன்படுத்தியது நியாயமானது: விசாரணை அறிக்கை!!

அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தியது நியாயமானது: விசாரணை அறிக்கை!!

கனேடிய அரசாங்கம் கடந்த பெப்ரவரியில் டிரக்கர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, ஒருபோதும் பயன்படுத்தப்படாத அவசரகால அதிகாரங்களை செயல்படுத்தியது நியாயமானது என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 1988 அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான விசாரணைக்கு தலைமை தாங்கிய நீதிபதி பால் ரூலூ, இந்த முடிவை கடுமையான நடவடிக்கை என்று அழைத்தார், ஆனால் சர்வாதிகார நடவடிக்கை அல்ல என தெளிவுப்படுத்தினார்.

நெருக்கடி காலங்களில் அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரங்களை இந்த சட்டம் வழங்குகிறது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இதை 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பயன்படுத்தினார்.

‘சட்டப்பூர்வ எதிர்ப்பு சட்டவிரோதமாக இறங்கியது, இது தேசிய அவசரநிலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது’ என்று ரூலூ தனது பொது ஒழுங்கு அவசர ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது வெள்ளிக்கிழமை ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகள் பொருத்தமானது மற்றும் பயனுள்ளவை என்று ரூலூ கூறினார்.

அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது அவசியம் என்று அறிக்கை கூறினாலும், இதுகுறித்து கருத்து தெரிவித்த ட்ரூடோ, அறிக்கையின் பரிந்துரைகளை தனது அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்றும், அதைப் பகுப்பாய்வு செய்த பின்னர் அடுத்த ஆண்டுக்குள் பதில் வரும் என்றும் கூறினார். எதிர்ப்புகள் பற்றிய அவரது கருத்துக்கள் பற்றிய விமர்சனத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

RELATED ARTICLES

Most Popular