Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கைமுன்னாள் பிரதியமைச்சரின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு இடைநிறுத்தம்!

முன்னாள் பிரதியமைச்சரின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு இடைநிறுத்தம்!

முன்னாள் பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபாவின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெத்திகே இன்று(வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றவாளியான மாயோன் முஸ்தபாவிற்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, 500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக களமிறங்கிய சரத் பொன்சேக்காவிற்கு தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக,  அந்த கட்சியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முசம்மிலுக்கு 42 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

Most Popular