Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைமகளிர் ரி-20 உலகக்கிண்ணம்: இலங்கை அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்ரேலியா அபார வெற்றி!!

மகளிர் ரி-20 உலகக்கிண்ணம்: இலங்கை அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்ரேலியா அபார வெற்றி!!

மகளிர் ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

க்கெபெர்ஹா மைதானத்தில் குழு ஏ பிரிவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியா அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மாதவி 34 ஓட்டங்களையும் விஸ்மி குணரத்ன 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மேகன் ஷட் 4 விக்கெட்டுகளையும் கிரேஸ் ஹரிஸ் 2 விக்கெட்டுகளையும் வேர்ஹாம் மற்றும் எலீஸ் பெர்ரி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து, 113 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 15.5 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அவுஸ்ரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அலிசா ஹீலி ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் பெத் மூனி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகியாக 43 பந்துகளில் ஒரு சிக்ஸர் 6 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை அலிசா ஹீலி தெரிவுசெய்யப்பட்டார்.

RELATED ARTICLES

Most Popular