Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்ஊதியப் பிரச்சனையில் மிகப்பெரிய வெளிநடப்பை அறிவித்தது றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங்!!

ஊதியப் பிரச்சனையில் மிகப்பெரிய வெளிநடப்பை அறிவித்தது றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங்!!

இங்கிலாந்தில் ஊதியப் பிரச்சனையில் மிகப்பெரிய வெளிநடப்பை, றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் பாதி மருத்துவமனைகள், மனநலம் மற்றும் சமூக சேவைகளில் அதன் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.

கிரிட்டிகல் கேர் மற்றும் கீமோதெரபி போன்ற முக்கிய பகுதிகளில் பணிபுரியும் உறுப்பினர்களை முதல் முறையாக வேலைநிறுத்த நடவடிக்கையில் பங்கேற்குமாறு தொழிற்சங்கம் கேட்டுக் கொள்ளும்.

இதனிடையே, தொழிற்சங்கம் நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்துவதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘நாங்கள் தற்செயல் திட்டங்களில் தேசிய சுகாதார சேவை இங்கிலாந்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், ஆனால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாமல் மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும்’ என்று சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே கூறினார்.

முந்தைய ஆறு வெளிநடப்புகளின் போது, றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் முக்கிய சேவைகளுக்கு வேலைநிறுத்த நடவடிக்கையிலிருந்து விலக்கு அளித்தது.
இதில் டயாலிசிஸ், பிறந்த குழந்தை பராமரிப்பு, தீவிர சிகிச்சை, குழந்தை மருத்துவம், A&E மற்றும் கீமோதெரபி ஆகிய அடங்கும்

RELATED ARTICLES

Most Popular