Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைஇலங்கையின் சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஆபத்து இல்லை: காஞ்சன விஜேசேகர!

இலங்கையின் சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஆபத்து இல்லை: காஞ்சன விஜேசேகர!

இலங்கையின் தேசிய சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இலங்கையின் தேசிய சக்தி வலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்கள் நாட்டில் சக்தி வலு பாதுகாப்பு காணப்படுவதை உறுதி செய்வதே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் முன்னெடுக்கவேண்டிய முதல் நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டினார்.

சக்தி வலு பாதுகாப்பு என்பது உணவு பாதுகாப்பு, மருந்து பாதுகாப்பு உட்பட அனைத்துடனும் தொடர்புபட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் நாங்கள் தீர்மானங்களை எடுப்போம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணவேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக தெளிவாக உள்ளார் எனவும் கடந்த 12 மாதங்களில் இந்தியா எங்களிற்கு பெரும் ஆதரவாக காணப்பட்டுள்ளது எனவும் காஞ்சன விஜயசேகர மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular