Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைதேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அஞ்சாது – கோகிலா ஹர்சனி குணவர்தன!

தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அஞ்சாது – கோகிலா ஹர்சனி குணவர்தன!

நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றை எதிர்கொள்வதற்கும் தாங்கள் தயாராகவே இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வாக்குகளை வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற தரப்பினர் இன்று எதிர்க்கட்சிகளில் இருந்துகொண்டு செயற்படுவதால் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை எந்தவிதத்திலும் பாதிக்காது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெண்கள் முன்னணி என்ற முறையில் எதிர்வரும் வாரங்களில் நாடளாவிய ரீதியில் சம்மேளனத்தை நடத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

கட்சி என்ற முறையில் எமது அரசியல் நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துக்கொண்டு செல்கின்றோம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எந்தத் தேர்தலையும் வெற்றிகொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன எப்போதும் தயாராகவே இருக்கின்றது.

யார் எதனைக் கூறினாலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அஞ்சாது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் பாரிய தோல்வியைச் சந்திப்போம் என்று அனைவரும் கூறினர்.

எனினும், அந்தத் தேர்தலிலும் நாம் பாரிய வெற்றியைப் பெற்றோம். அதேபோன்று இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் பாரிய வெற்றியைப் பெறுவோம்.

நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றை எதிர்கொள்வதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். அதற்காகக் கிராமங்களில் உள்ள மக்கள் தயாராகவே இருக்கின்றனர்.

இந்த நாட்டுக்குச் சேவையாற்றியவர்கள் யார், சேவையாற்றாதவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

ஹெலிஹொப்டர் சின்னத்தில் இருப்பவர்களும் ஏனைய எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் எமது கட்சியிலேயே கடந்தமுறை போட்டியிட்டார்கள்.

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு நன்கு பாடம் புகட்டுவார்கள்“ எனத் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

Most Popular