Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைஅரச அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரச அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

வாக்குச் சீட்டுகளை வழங்கத் தவறிய அரச அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் கண்காணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

வாக்குச் சீட்டுகளை வழங்காமல் இருக்க அரச அச்சகம் அரசியலமைப்புக்கு முரணான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவும் அரசாங்க அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பான பொதிகள் இன்று புதன்கிழமை இலங்கை தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவிருந்தது.

எனினும் வாக்குச் சீட்டுகள் வழங்கப்படாததால், அந்தச் செயல்முறை காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular