Thursday, November 30, 2023
spot_img
Homeகனடாஹெய்ட்டிக்கு அவசரமாக இராணுவ விமானங்களை அனுப்பும் கனடா

ஹெய்ட்டிக்கு அவசரமாக இராணுவ விமானங்களை அனுப்பும் கனடா

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டிக்கு, கனேடிய அரசாங்கம் இராணுவ விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.

ஹெய்ட்டியில் இடம்பெற்று வரும் கோஷ்டி வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உதவும் நோக்கில் இவ்வாறு இராணுவ விமானங்களை கனடா அனுப்பி வைத்துள்ளது.

கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மெலெய்ன் ஜோலி ஆகியோர் கூட்டாக இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஹெய்ட்டிக்கு அவசரமாக இராணுவ விமானங்களை அனுப்பும் கனடா | Canada Sends Military Aircraft Into Haiti

CP-140 Aurora என்ற இராணுவ விமானம் ஹெய்ட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழுக்களுக்கு இடையில் வன்முறை

குழுக்களுக்கு இடையில் நிலவி வரும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு இராணுவ விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த கோடை காலம் முதல் ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட் அயு பிரின்ஸில் கடுமையான கோஷ்டி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மோதல்களினால் நூற்றுக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹெய்ட்டிக்கு அவசரமாக இராணுவ விமானங்களை அனுப்பும் கனடா | Canada Sends Military Aircraft Into Haiti

வன்முறை கும்பல்கள் பெண்கள் சிறுவர் சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதுடன், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஹெய்ட்டி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு இராணுவ விமானம் அனுப்பி வைக்கப்படுவதாக கனடா தெரிவித்துள்ளது. 

RELATED ARTICLES

Most Popular